TNPSC Thervupettagam

பெண்கள் உரிமைகள் குறித்த அரசியல் பிரகடனம் 

April 8 , 2020 1600 days 1334 0
  • இந்த அரசியல் பிரகடனமானது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற பெண்களின் நிலை குறித்த 64வது ஆணையத்தின் முடிவாக ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ளது.
  • இது ஐ.நா.வில் நடைபெறும் பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் மேம்பாடு குறித்த ஒரு மிகப்பெரிய வருடாந்திரக் கூட்டமாகும்.
  • பெண்கள் மீதான ஐ.நா.வின் பிரகடனத்திற்கு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் ஒருமுறை ஒப்புதல் அளிக்கப் படுகிறது.
  • இது 1995 ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் நடைபெற்ற பெண்கள் பற்றிய நான்காவது உலக மாநாட்டின் 25வது ஆண்டு நிறைவை நினைவு கூர்கிறது.
  • பெய்ஜிங் உச்சி மாநாடு நடந்து முடிந்த இந்த 25 ஆண்டுகளில், "எந்த நாடும் பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய வில்லை" என்று அறிவிப்பில் குறிப்பிடப் பட்டுள்ளது.
  • 1995 ஆம் ஆண்டிற்கான பெய்ஜிங் பிரகடனம் மற்றும் செயல் இயங்குதளமானது உலகெங்கிலும் உள்ள பெண்களின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் ஊக்குவிக்க முயல்கிறது. 
  • இது பெண்களின் உரிமைகள் குறித்த மிகவும் தொலைநோக்கு கொண்ட ஒரு செயல் திட்டமாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்